கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்

392 0

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது.

திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளையும் கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கச்சத்தீவு திருவிழாவுக்கு இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து ஒன்பதாயிரத்தற்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்படை நிர்மாணித்த புனித தேவாலய கட்டிடத்தொகுதியில் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.