தமது சுற்றிவளைப்பால் கொழும்பு நகர், போதைப் பொருள் மோசடிகாரர்களுக்கு கடினமான இடமாக மாறியுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிராண்ட்பாஸ் பகுதியில் 16 கோடி ருபா பெறுமதியான 13 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான வர்த்தகர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராண்டபாஸ் – நாகலகம் வீதி பகுதியில் கடந்த திங்கட்கிழமை குறித்த ஹெரோயினுடன் சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்துக்குரிய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் பிரசந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இதனுடன் போதைப் பொருள் மோசடிகாரர்களின் சொத்துக்கள், பணமோசடி சட்டத்தின் கீழ் அரசுடமையாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

