தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சதி இடம்பெற்று வருவதாக ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் மக்கள் விடுதலை முன்னணியையும் நாட்டினுள் பலமான எதிர்க் கட்சிகளாக உருவாக்க அரசாங்கம் செயற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

