தினமென்சதுக்க படுகொலையை நினைவுகூர முயன்றவர்கள் ஹொங்கொங்கில் கைது

215 0

தினமென்சதுக்க படுகொலைகள் இடம்பெற்று 34 வருடங்களாகின்ற நிலையில் படுகொலைகளை நினைவுகூர முயன்ற பலர் ஹொங்கொங்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தினமென் சதுக்க படுகொலைகளை நினைகூரவேண்டும் என்பதற்கு ஆதரவாக குரல்கொடுக்கும் 67 வயது அலெக்ஸாண்டிரா வொங் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹொங்கொங்கில் பல வருடங்களாக நினைதின நிகழ்வுகள் இடம்பெறும் விக்டோரியா பூங்காவிற்கு பூக்களுடன் சென்றவேளை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹொங்கொங்கின் எதிர்கட்சி தலைவரும் நினைவஞ்சலியில் ஈடுபட்டிருந்தவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

 

ஹொங்கொங் பத்திரிகையாளர்கள் சங்கத்தலைவரும் கைதுசெய்யப்பட்டுபின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைதுகள் குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் கருத்துசுதந்திரம் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரத்திற்கான உரிமைகளை பயன்படுத்தியவர்களை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1989ம் ஆண்டு படுகொலைகளை நினைகூறுவதற்கான நிகழ்வுகள் ஹொங்கொங்கில் தடை செய்யப்பட்டுள்ளன.

 

 

 

 

 

 

2020 இல் உடன்படமறுப்பதை தடை செய்யும் விதத்தில் கடுமையான விதத்தில் தேசிய பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து நினைவுகூறும் நிகழ்வுகளிற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.