குப்பைகளை முகாமைப் படுத்தல் தொடர்பில் ஜனாதிபதியின் அவதானம்

405 0
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றுவது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பை அண்மித்த பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்கு, அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றுவதில்லை.
இவ்வாறான காரணங்களினாலேயே கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் குப்பை தேங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொடர்மாடி குடியிருப்புக்கள், சேரிப்பகுதிகள் மற்றும் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களுக்கு குப்பை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.