தமிழக மீனவர்கள் விடுவிப்பு

331 0
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 77 பேர் விடுவிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 53 தமிழகமீனவர்கள்களும், வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 24 தமிழக மீனவர்கள்களுமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய மீனவர்கள்களை விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 85 தமிழக மீனவர்கள்களையும், இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 மீனவர்கள்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.