அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கொண்டுவரப்பட்ட பயண தடை சட்டத்திற்கு மேலும் மூன்று அமெரிக்க மானிலங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளன.
முன்னதாக ஹவாய் மானிலம் இந்த சட்டத்திற்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தது.
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் இந்த புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் மானிலங்களினால் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் வெற்றி அளிக்கப்போவதில்லை என வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் மாற்றம் செய்யப்பட்ட பிரேரணைக்கு அமைய சோமாலியா ஈரான் சிரியா சூடான் மற்றும் யேமன் ஆகிய நாட்டவர்களுக்கு புதிய அமெரிக்க நுழைவு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர அகதிகள் அமெரிக்காவினுள் நுழைவதற்கான அனுமதி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை திருத்தப்பட்ட பிரேரணைக்கு அமைய தடை செய்யப்பட்ட நாடுகளில் ஈராக் அகற்றப்பட்டுள்ளது.
அத்துடன் ஏற்கனவே அமெரிக்க ராஜாங்க அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட அகதிகள் தற்போது பிரச்சனை இன்றி அமெரிக்காவிற்குள் நுழையலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

