நீதிபதிகளின் எண்ணிக்கையை உடன் அதிகரிக்க வேண்டும் – பிரதம நீதியரசர்

340 0

வழக்கு விசாரணைகள் தாமதமாவதற்கு உடனடி தீர்வு வழங்க உயர்நீதிமன்ற மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உடன் அதிகரிக்க வேண்டும் என பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற புதிய பிரதம நீதியரசரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஊடாக நீதித்துறையும் புதிய தொழில்நுட்பத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.

எதிர்காலத்தில் இணைத்தளம் ஊடாக வழக்குத் தாக்கல் செய்யும் முறைமையை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பு என பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தெரிவித்துள்ளார்.