இந்தியாவில் ரயில்கள் மோதி கோர விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு : 900 பேர் காயம்

198 0
image
இந்தியாவின் ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

18 க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.