கொழும்பு, கொட்டாஞ்சேனை கொலேஜிவீதிய பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது அவரிடமிருந்து ஒரு கிலோவும் 03 கிராம் நிறையுடைய ஹெரோய்ன், விற்பனை மூலம் பெறப்பட்ட 60,000 ரூபா பணம் மற்றும் இலத்திரனியல் தராசு ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் 33 வயதுடைய ஒருவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
வௌிநாட்டில் வசிக்கக்கூடிய ஒருவரினால் இந்த ஹெரோய்ன் போதைப் பொருள் வழங்கப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

