தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் வடமாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. நாளை வவுனியாவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை முழுமையாக செயற்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வட மாகாண சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள யோசனை தொடர்பாக இதன்போது பேசப்பட உள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறித்த யோசனையை தாக்கல் செய்திருந்ததுடன், அது தொடர்பான விவாதம் எதிர்வரும் 14ம் திகதி வடமாகாண சபையில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான விவாதம் நேற்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில், இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அந்த விவாதத்தை பிற்போட தீர்மானித்ததாக வட மாகாண சபையின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கூறினார்.

