சிம்பாப்வே போதகரை வரவேற்பதற்காக விமானநிலையத்தின் அதிஉயர் பாதுகாப்பு பகுதிக்குள் சென்றார் ஜெரோம் – அனுமதிவழங்கியது யார்?- வெளியாகியது புதிய படம்

41 0

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ கடந்த வருடம் சிம்பாப்வேபோதகர் உபேர்ட் ஏஞ்சலை வரவேற்பதற்காக கொழும்புவிமானநிலையத்தின் மிகவும் பாதுகாப்பான பகுதிக்குள் எவ்வாறு சென்றார் என கேள்விகள் எழுந்துள்ளன.

ஜெரோம் பெர்ணாண்டோ தனதுதனிப்பட்ட செல்வாக்கையும் அரசியல்செல்வாக்கையும் பயன்படுத்தி பாதுகாப்பு ரீதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்றுள்ளார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விமானநிலையத்தின் பாதுகாப்பு ரீதியில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் மிக முக்கிய இராஜதந்திரிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் விவிஐபி பேருந்தில் ஜெரோம்பெர்ணாண்டோ சிம்பாப்பே போதகருடன் காணப்படும் படம்கிடைத்துள்ளது.