மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கு நானே பொருத்தமான ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் – ஜனகரத்நாயக்க

96 0

அனைத்துபொதுவேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளதால்  அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் வேட்பாளராக போட்டியிடுவேன் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனகரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல அரசியல்கட்சிகள் உள்ளன ஆனால் இவை அனைத்தும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறிவிட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

அடு;த்த ஜனாதிபதி தேர்தலில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நானே பொருத்தமானவன்  என தெரிவித்துள்ள அவர் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து பகிரங்கமாக அறிவித்ததும்  பல கட்சிகள் எனக்கு ஆதரவளிக்க முன்வரலாம் எனவும் குறி;ப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது பொருத்தமான பொதுவேட்பாளர் என எவரும் இல்லை,அனைவரும் தோல்வியடைந்துவிட்டனர்,ஆகவே நானே மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கான மிகவும் பொருத்தமான வேட்பாளராக காணப்படுவேன் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

எந்தகட்சியின் சார்பில் போட்டியிடுவீர்கள் என்ற கேள்விக்கு இது குறித்து தான் இன்னமும் தீர்மானிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள ஜனகரட்நாயக்க தான் தேர்தலில் போட்டியிடுவதுகுறித்து அறிவித்ததும் பல கட்சிகள் தன்னை நாடிவரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.