புகையிரதத்துடன் மோதி இரு இளைஞர்கள் பலி!

92 0

வெயங்கொட, வந்துராவ பகுதியில் இரண்டு இளைஞர்கள் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளனர்.
அதே பகுதியில் வசித்து வந்த 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
புகையிரத பாதையில் பயணித்தபோது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் குறித்த இளைஞர்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டு இளைஞர்களும் தங்களது தொலைபேசிகளை பயன்படுத்திய நிலையில் புகையிரத பாதையில் பயணித்துள்ளதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களும் வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெயங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.