
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான் குளப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று வியாழக்கிழமை (25) பொலிஸார் முற்றுகையிட்டனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை பொலிஸாருடன் இணைந்து குறித்த குளப்பகுதியை முற்றுகையிட்டனர்.
அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ததுடன் உள்ளூர் தயாரிப்பு துப்பாகி ஒன்று, 15 கஞ்சா செடிகள் மற்றும் 2 பெரல் கோடா என்பவற்றை மீட்டனர்.
இதில் மீட்கப்பட்ட 2 பெரல் கோடைவை அந்த பகுதியில் அழித்ததுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.