ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தாட்கோ மூலம் பட்டப்படிப்புடன் ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

153 0

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தாட்கோ மூலம் பட்டப்படிப்புடன் கூடிய பிரபல ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு என சென்னை மாவட்ட ஆட்சியர் சு. அமிர்தஜோதி அறித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022-23-ம்ஆண்டுகளில் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பிஎஸ்சி, பிகாம், பிசிஏ, பிபிஏ படிக்க வழி வகை செய்யப்படும்.

அதுமட்டுமின்றி, ஹெச்சிஎல்டெக்னாலஜியில் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் பிஎஸ்சி கணினி வடிவமைப்பு பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தராபல்கலைக்கழகத்தில் பிசிஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் பிசிஏ, பிகாம், பிபிஏ மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு சேர்ந்து படிக்க, வாய்ப்பு பெற்று தரப்படும்.

12-ம் வகுப்பு 2022-ல் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023-ல் முடித்தவர்கள் 75 சதவீதம் குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஹெச்சிஎல் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்புக்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

இப்பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணைதள முகவரியில் விண்ணப்பித்து மாணவர்கள் பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.