பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொடர்ந்து நடவடிக்கை

83 0

பொருளாதாரத்தின் அனைத்து பங்குதாரர்களின் நலனுக்காக நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை மத்திய வங்கி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு தலைமை தாங்கிய அவர்மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

70 சதவீதமாக இருந்த பணவீக்கம் 30 வீதமாகக் குறைந்துள்ளமையைச் சுட்டிக்காட்டிய ஆளுநர்,பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுக்க பல தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டார்.

அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் கொடுப்பனவுகளின் இருப்பு பற்றாக்குறையை கட்டுப்படுத்த தீர்க்கமான நடவடிக்கை எடுப்பதே மத்திய வங்கியின் முக்கிய நோக்கம் என்றும் அதற்கானகொள்கை நடவடிக்கைகள் வேதனையளிப்பதாக தெரிவித்தார்.

வட்டி விகிதங்களை உயர்த்துவது, வணிகங்களுக்கு கடினமான மற்றும் வேதனையான நடவடிக்கை என்றும் இது இப்போதைக்கு குறுகிய கால தீர்வாகும் என்றும் கூறினார்.