மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அரசாங்கம் அதற்கான தீர்வுகளை காண வேண்டும் – மகிந்த

373 0

நாட்டில் கொலைகள் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பான குற்றச்சாட்டுகளை வெவ்வேறு தரப்பினர் மீது முன்வைப்பதில் பலனில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் தற்போது அதிக அழுத்தங்களுடன் உள்ளனர்.

வடக்கு மக்களைப் போல தெற்கு மக்களும் அரசாங்கத்துக்கு எதிராக கோசம் எழுப்புகின்றனர்.

அரசாங்கத்தின் கடமை, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே அன்றி, மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இல்லை.

எவ்வாறாயினும், மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அரசாங்கம் அதற்கான தீர்வுகளை காண வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.