அரசியல் ஆலோசனை தொடர்பில் சவுதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

61 0

வெளிவிவகார அமைச்சு மற்றும் சவுதி அரேபிய இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சுக்குமிடயில் அரசியல் ஆலோசனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு மற்றும் சவுதி அரேபிய இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சுக்குமிடையில் அரசியல் ஆலோசனை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மாழியப்பட்டுள்ளது.

குறித்த புரிந்துணரவு ஒப்பந்தத்தின் மூலம் ஏனைய சர்வதேச நிறுவனங்களின் நேர்மய வகிபாங்குகள் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள், அரசியல் போக்குகள் மற்றும் பரஸ்பர ரீதியான முக்கியமான விடயங்கள் பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொண்டு இருதரப்பு தொடர்புகளை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.