கிண்டலுக்கு ஆளான குண்டு போலீஸ்காரருக்கு அடித்த அதிர்ஷ்டம்

200 0

மராட்டிய மாநிலத்தில் உடல் பருமனான போலீஸ் ஒருவரின் படம் சமூக வலைதளங்களில் கிண்டலுக்குள்ளான நிலையில், அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை முன்வந்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜோகாவாட் 180 கிலோ எடையுடன் உடல் பருமனாக இருப்பவர். இந்நிலையில், ஜோகாவாட்டின் புகைப்படத்தை பிரபல எழுத்தாளர் ஷோபா டே தந்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து, மும்பையில் உள்ள போலீஸார் உள்ளூர் தேர்தல்களுக்காக பலமான பாதுகாப்பிற்கு திட்டமிட்டுள்ளனர் என்று கிண்டல் செய்யும் விதமாக கருத்துக்களையும் பதிவிட்டிருந்தார்.

உடல் பருமானான போலீஸ்காரரை கிண்டல் செய்து இந்தியாவின் பிரபல எழுத்தாளர் ஒருவர் போட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. மேலும், எதிர்பாராத விளைவாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையானது உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை அந்த போலீஸ்காரரருக்கு அளிக்க முன்வந்தது.

அறுவை சிகிச்சை முடிந்து கடந்த திங்கட்கிழமையன்று மருத்துவமனையைவிட்டு வெளியேறிய ஆய்வாளர் தவுலட்ராம் ஜோகாவாட், தன்னை பிரபலமாக்கிய எழுத்தாளர் ஷோபா டேக்கு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சையை தொடர்ந்து ஜோகாவாட் நலமாக இருப்பதாகவும், அடுத்த ஆண்டிற்குள் சுமார் 80 கிலோ எடையை அவரால் இழக்க முடியும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.