88 வயது அவுஸ்திரேலிய பணயக்கைதியை ஏழு வருடங்களின் பின்னர் விடுதலை செய்தது அல்ஹைதா

66 0

ஏழு வருடங்களாக  பிடித்துவைத்திருந்த அவுஸ்திரேலியர் ஒருவர் அல்ஹைதா விடுதலை செய்துள்ளது.

மேற்கு ஆபிரிக்காவிற்கான அல்ஹைதா தான் ஏழு வருடங்களாக பிடித்துவைத்திருந்த மருத்துவர் கெனெத்எலியட்டை விடுதலை செய்துள்ளது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2016 இல் மாலிக்கும் புர்கினா பாசோவிற்கும் இடையில் கெனெத் எலியடடும் அவரது மனைவியும்  அல்ஹைதாவிடம் பிடிபட்டனர்பிடிபட்டனர்.

அல்ஹைதா அவர்கள் பணயக்கைதிகளாக உள்ளதை உறுதி செய்திருந்தது.

எனினும் அழுத்தங்கள் காரணமாக மூன்று வாரங்களின் பின்னர்  எலியட்டின் மனைவியை அல்ஹைதா விடுதலை செய்தது.

இதேவேளை எலியட் விடுதலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவரது குடும்பத்தினர் 88 வயதில் வீட்டிலிருந்து வெளியே பல வருடங்கள் அவர் வாழ்ந்துள்ளதால் அவருக்கு ஓய்வெடுப்பதற்கும் தன்னை மீண்டும் வலுப்படுத்திக்கொள்ளவும் தனிமை அவசியம் என குறிப்பிட்டுள்ளது.