இலங்கை அரசினால் 2009 மே மாதம் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் 18.05.2023 இன்று பெல்சியம் அன்ற்வெப்பனில் பகல் 13.30 மணியளவில் பெரும் திரளான தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் ஒன்றுகூடி நினைவு நிகழ்வும் பேரணியும் அத்துடன் கண்காட்சியும் இடம்பெற்றது. உணர்வெழுச்சியுடன் மக்கள் பெரும் அதிர்வலையாக கோசம் எழுப்பியபடி பேரணி அன்றவெப்பன் நகரைச் சுற்றி வந்து opera plein எனுமிடத்தில் நிகழ்விற்காக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் முடிவடைந்து வணக்க நிகழ்வு இடம் பெற்றது . 2009 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட மக்களுக்காக பொதுச்சுடரேற்றி அகவணக்கம் மலர்வணக்கம் செலுத்தி பெல்சிய நாட்டு மொழியிலும் தமிழ் மொழியிலும் படுகொலை பற்றி நினைவுரையாற்றப்பட்டது. அத்துடன் 2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற இன அழிப்பின் சிறு நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் முள்ளிவாய்க்காலில் மக்களின் பசியாற்றிய கஞ்சி அதே உணர்வுடன் மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு இறுதியாக எமது தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
- Home
- முள்ளிவாய்க்கால்
- தமிழின அழிப்பு நாள் மே -18-பெல்யியம்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
சோவியத் எல்லைகளில் இருந்து “Trump பாதை” வரை-ஈழத்து நிலவன்.
August 9, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி ,Landau.
August 11, 2025 -
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஈருருளிப்பயணம் – யேர்மனி
August 9, 2025 -
மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025 -
லெப்.கேணல் திலீபனின் நினைவெழுச்சிநாள் -யேர்மனி Frankfurt.
August 9, 2025 -
தமிழர் விளையாட்டு விழா 2025-பெல்சியம்
July 17, 2025