சிறுபான்மையினரும் பாதிக்கப்படாமல் தேர்தலை நடத்தவும் – ஸ்ரீ சித்­தார்­த்த சுமங்­கல தேரர்

288 0

உள்­ளூ­ராட்சி சபைத்­தேர்­தலை சிறு­கட்­சிகள் மற்றும் சிறு­பான்­மைக்­கட்­சி­களின் பிர­தி­நி­தித்­து­வத்துக்குப் பாதிப்பு ஏற்­படா வண்ணம் நடாத்­தும்­படி மல்­வத்து பீட மகா நாயக்க தேரர் திப்­பட்­டு­வாவே ஸ்ரீ சித்­தார்­த்த சுமங்­கல தேரர் மாகா­ண ச­பை­கள் மற்றும் உள்­ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விடம் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்ளார்.

இதே­வேளை, இன மற்றும் மத ரீதி­யான அர­சியல் கட்­சி­களைப் பதிவு செய்­வ­தற்கு இட­ம­ளிக்க வேண்­டா­மெ­னவும் இது நல்­லி­ணக்­கத்­துக்குப் பாதிப்­பாக
அமை­யு­மெ­னவும் அஸ்கி­ரிய பீட மகா­நா­யக்க தேரர் வர­கா­கொட ஞான­ரத்ன தேரர் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

மாகா­ண ச­பைகள் மற்றும் உள்­ளூராட்சி அமைச்சர் நேற்று முன்­தினம் மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடா­தி­பதிகளைச் சந்­தித்து நல்­லாசி பெற்­றுக்­கொண்டார். அச்­சந்­தர்ப்­பத்­திலே பீடா­தி­ப­திகள் இவ்­வேண்­டு­கோளை அமைச்­சரிடம்
முன்­வைத்­தனர்.

புதிய தேர்தல் முறை­மையின் கீழ் சிறு­கட்­சிகள் மற்றும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­ப­டு­மெனக்
கூறப்­ப­டு­கி­றது.

அவ்­வாறு பாதிப்­புக்கள் ஏற்­படாவண்ணம் தேர்­தலை நடாத்­து­வ­தற்கு ஏற்­பா­டுகள் செய்­யுங்கள் என மல்­வத்து பீட மகாநாயக்க தேரர் வேண்டிக் கொண்டார்