வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 13 ஆவது நாளாகவும் போராட்டத்தில்…(காணொளி)

276 0

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 13 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் பதின்மூன்றாவது நாளாக இடம்பெற்றுவரும் நிலையில், உலகப் பெண்கள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்று கூடி ஒப்பாரிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

3 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, ஜனாதிபதியிடம் நீதி கோரி தபால் மூலமான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.

இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளில் ஒருவர்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக கணவர்களுக்காக தந்தையர்களுக்காக சகோதரர்களுக்காக போராட வேண்டிய நிலையில் பெண்கள் உள்ளனர்.

இந்த நிலை வடக்கு கிழக்கில் பொதுவாக காணப்படுகிறது.

நாங்கள் கடந்த ஒன்பது வருடங்களாக மேற்கொண்டுவரும் பலவகையான போராட்ட நெடும்பணயங்கள் எதுவித பலனும் இன்றி தொடர்கின்றது.

இதனால் மனதாலும் உடலாலும் களைத்துபோய் விட்டோம்,

சோர்வுற்ற நிலையிலும் ஒரு நாள் எமக்கு நீதி கிடைக்கும், எமது உறவுகள் மீண்டும் எம்முடன் சேருவார்கள் என்ற நம்பி;க்கையில் நீதியின் கதவை தட்டியவண்ணம் உள்ளோம் என தெரிவித்தார்.