தினேஷுக்கு தற்காலிக பாராளுமன்றத் தடை

220 0

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு ஒரு வாரம் பாராளுமன்றத்தை தடை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் வாக்கெடுப்பொன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்துக்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் 114 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதை அடுத்து அவரை பாராளுமன்றத்திலிருந்து வெளியேறுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய உத்தரவிட்டிருந்தார்.