 “எத்தனை துயர் வரினும்
“எத்தனை துயர் வரினும்
எத்தனை இடர் வரினும் நாம்
எமது விடுதலைப் பாதையிலே
தொடர்ந்து போராடுவோம்”
எனும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய சிந்தனையுடன்
நேற்று (15.05.2023) டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில், டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஆரம்பமான தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வானது, இன்று Kongens Nytorv சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது.
இன அழிப்பில் உயிர்நீத்த மக்களுக்கான வணக்க நிகழ்வுடன் ஆரம்பமான இந் நிகழ்வில், 2009 இல் தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட இன அழிப்பை, டெனிஸ் மக்களுக்கும் வேற்றின மக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையிலான
கவனயீர்ப்பாக இது அமையப்பெற்றது.
இன்றைய நாள் நிகழ்வில் தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து,
தாயகத்தில் எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை பறைசாற்றும் விதத்தில் பதாகைகள், விவரணப் படங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் முலம்
பரப்புரைகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து இக் கவனயீர்ப்பு நிகழ்வு நாளையும் (17.05.2023) Kongens Nytorv சதுக்கத்தில்
நடைபெற உள்ளதோடு, எதிர்வரும்18.05.2023 அன்று டென்மார்க் தலைநகரில் நீதிக்கான ஏழுச்சிப் பேரணியும் நடைபெறவுள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
 
                        






















 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            