வைத்தியர் ஷாஃபியின் அடிப்படை உரிமைகள் மனு உயர் நீதிமன்றம்நிராகரித்தது உயர் நீதிமன்றம்

121 0
தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இது தொடர்பான விடயங்களை நீண்ட காலம் பரிசீலித்ததன் பின்னர் இந்த தீர்மானத்தை இன்று வழங்கியுள்ளது.குருநாகல் பொலிஸ் உத்தியோகத்தர்களால் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பணச்சலவை சட்டத்தின் கீழ் தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது எனக் கூறி வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.