தொடர்ச்சியான போராட்டங்களுக்கு தயாராகும் தமிழக மீனவர்கள்

536 0

fish01இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டு மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, தமிழக மீனவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

இது தொடர்பில் ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் போது தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 22ஆம், 26ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

இலங்கையில் தற்போது 77 தமிழக மீனவர்களும் அவர்களின் 103 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க கோரி இவ்வாறு போராட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.