சகல பல்கலைகழக விரிவுரையாளர்களும் இன்றைய தினம் அடையாள சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.பல்கலைகழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி இதனை தெரிவித்துள்ளார்.
வேதன பிரச்சினையை முன்னிறுத்தியே இந்த அடையாள சேவைப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு இன்றைய தினம் தீர்வு கிடைக்காவிடின் நாளை தினமும் சேவைப்புறக்கணிப்பு தொடரும் என அவர் எச்சரித்துள்ளார்.

