நுவரெலிய – தெரிபேஹெ – தப்பேரே பிரதேசத்தில் அதிக செங்குத்தான பகுதியை சீரமைத்து கொண்டிருந்த போது கல் ஒன்று புரண்டதில் தந்தை மற்றும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 70 வயதான தந்தையும், 36 வயதான மகனுமே உயிரிழந்துள்ளனர்.
அதிக செங்குத்தான பகுதியில் விவசாயத்தை மேற்கொள்வதற்காக சீரமைத்து கொண்டிருந்த போது அந்த இடத்திற்கு மேலாக இருந்த பாரிய கல்லொன்று புரண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

