டிரம்ப் பாலியல் வன்முறை குற்றவாளி – நீதிமன்றம் தீர்ப்பு

69 0
image

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனாலட் டிரம்ப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1990களில் நியுயோர்க்கின் பல்பொருள் அங்காடியில் பத்தி எழுத்தாளர் ஒருவரை டிரம்ப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பேர்க்டோவ் குட்மனின் ஆடைமாற்றும் அறையில் டிரம்ப் ஈ ஜீன்  கரோலை பாலியல்வன்முறைக்கு உட்படுத்தினார் என நீதிமன்றம் தீர்ப்பளி;த்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய் என தெரிவித்தமைக்காக  டிரம்பிற்கு எதிராக அவதூறு வழக்கினை தாக்கல் செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளமை இதுவே முதல் தடவை.

இன்று உலகிற்கு உண்மை தெரியவந்துள்ளது என டுவிட்டரில் ஈ ஜீன் கரோல் பதிவிட்டுள்ளார். இது எனக்கு மாத்திரம் வெற்றியல்ல பாதிக்கப்பட்டவர் தெரிவித்ததை நம்பாததால் துயரை அனுபவித்த ஒவ்வொரு பெண்ணிற்கும் இந்த தீர்ப்பு ஒரு வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.