டென்மார்க் கேர்னிங் நகரில் 06.05.2023 சனிக்கிழமை அன்று அன்னை பூபதியம்மா அவர்களின் 35ஆவது வணக்க நிகழ்வு.

118 0

டென்மார்க் கேர்னிங் நகரில் 06.05.2023 சனிக்கிழமை அன்று, அன்னை பூபதியம்மா அவர்களின் 35ஆவது வருட நினைவு நாளும், நாட்டுப்பற்றாளர்கள் நினைவு வணக்க நிகழ்வும் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. அன்னை பூபதியம்மா மற்றும் நாட்டுப்பற்றாளர்களுக்கும்,
ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியபின், மக்களால் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம், அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்திய இராணுவத்திற்கு எதிராக இரண்டு அம்ச கோரிக்கையை முன்வைத்து அகிம்சை வழியில் போராடி சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச்சுடர் அன்னை பூபதியம்மா மற்றும் தாயக விடுதலைப் போராட்டத்தில் பின்புலமாக நின்று உழைத்து, டென்மார்க்கில் சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர்களான தம்பிஐயா மார்க்கண்டு, விமலேஸ் வரன் கணேசையா, மதியழகன் கார்த்திகேசு, செல்வராசா ஸ்ரெபஸ்ரியன் மற்றும் செல்வராசா பொன்னுத்துரை (அக்காச்சி) அவர்களின் தேச விடுதலை செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

எழுச்சியுடன் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வின் இறுதியில் தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற எழுச்சி கோசத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.