மகன் கடத்தப்படவில்லை கைது செய்யப்பட்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டவர் எங்கே?

234 0
மனித உரிமைகள் முன்னேற்ற நிலையத்தின் திட்டமுகாமையாளராக பணியாற்றிய எனது மகன் சின்னவன் ஸ்ரீபன் சுந்தரராஜ் கடத்தப்படவில்லை, அவர் கைது செய்யப்பட்டு  அரச கட்டுகப்பாட்டுக்குள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் ஆனால் இடம் தெரியாது என்று 2009 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சாரக இருந்த பாலித கொகன பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய உறுப்பினர்கள் மற்றும் ஜரோப்பிய ஒன்றி அலுவலர்களிடம் உறுதிப்படுத்தி தெரிவித்திருந்த நிலையிலும் இன்று வரை மகனை காணவில்லை என தாய் சின்னவன் திரோசா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி  கந்தசுவாமி ஆலயம் முன்னறலில் இன்று செவ்வாய் கிழமை பதினாறாவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஒருவரான திரோசா தனது மகனின் வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த நேர்காணல் படத்துடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்.
04-03-2007 காலப்பகுதியில்  வீரகேசரி வார இதழில் தனது மகன் அரசார்பற்ற நிறுவனம் ஒன்றில்  பணியாற்றிய போது சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பிலான வழங்கிய நேர்கானல் பக்கத்தை ஏந்தியவாறு  மகன் காணாமல் ஆக்கப்பட்ட கண்ணீர் கதையை விபரிக்கின்றார்.
ஆதவாது 2009-05-07 அன்று மகன் இராணுவ உடைதரித்து வந்த ஆயுத தாரிகளால் கடத்தப்பட்டார்.அன்றைய தினம் நீதவான் நீதிமன்ற வழக்கு இலக்கம் எம்சிபி 330ஃ9 கட்டளைப்படி விடுவிக்கப்பட்டிருந்தார். புpன்னர்  அன்று மாலை தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுக்கொண்டிருந்த போது கொள்ளுப்பிட்டி வரை மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின் தொடர்ந்த இருவர் நகர மண்ட சந்தியை தாண்டி மகளீர் கல்லூரியை அண்மித்த போது மாலை ஆறு மணியளவில் மோட்டார் சைக்கிளினால் கார் இடைமறிக்கப்பட்டு பிரிதொரு வெள்ளை வானில வந்த நான்கு அல்லது ஜந்து பேர் கொண்ட குழுவினரால் பலவந்தமாக காரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்டார். இதுவரை எவ்வித  தகவலும் இல்லை. நாங்களும்  செல்லாத இடமும் இல்லை முறையிடதா  அமைப்புகளும் இல்லை. எனத்  தெரிவித்தார்
அரசாங்க வெளிவிவகார அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வமாக சர்வதேச பிரதிநிதிகளிடம் எனது மகன் கடத்தப்படவில்லை  அவர் கைது செய்யப்பட்டுள்ளார் அரச கட்டுப்பாட்டுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அறிவித்த நிலையில் ஏன் இதுவரை அவரை வெளிக்கொணரவில்லை. தனது கணவனை காணாது மருமகளும், அப்பாவை காணாது பிள்ளைகளும் நாளும் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு இந்த நல்லாட்சி அரசாவது பதில் சொல்லக்கூடாதா?  எனவும்  கேள்வி எழுப்பிய திரேசா  காணாமல் ஆக்கப்பட்டவர்களி தொடர்பில் எங்களுக்கு ஏதாவது உறுதியான தீர்வு கிடைக்க வேண்டும் அதுவரைக்கும்  போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.