இலங்கை அரசிற்கு கால அவகாசம் கொடுக்க கூடாதென வலியுறுத்தல்

230 0

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2015 ம் ஆண்டின் ஒக்டோபர் 30/1 தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசிற்கு கால அவகாசம் கொடுக்க கூடாதென வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் 8 அல்லது 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டதாக கூறப்படும் கடிதத்தில் , குறைந்தது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்
கையொப்பம் இடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

G.ஶ்ரீ நேசன் , சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் K.கோடீஸ்வரன் ஆகியோர் , தாம் கையொப்பம் இட முடியாது என மறுத்திருந்த போதிலும் , அவர்களது பெயர்கள் அக்கடித்தில் இடம்பெற்றிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.