ரஷ்ய வெற்றி நாள் கொழும்பில் அனுஷ்டிப்பு

76 0

ஷ்ய வரலாற்றின் வெற்றி நாள் கடந்த வியாழக்கிழமை (4) கொழும்பு பொது நூலக வளாகத்தில் உள்ள நினைவுத்தூபியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது பிரபல ரஷ்ய திரைப்பட நட்சத்திரமான சோஸ்லான் ஃபிடரோவ் மற்றும் தேசிய முன்னணி தன்னார்வலர் அலியோனா போஸ்டோவலோவா ஆகியோரால் தேசபக்தி திட்டமான ‘தி ஃபிளேம் ஒஃப் மெமரி’யின் ஒரு பகுதியாக சுடர் கொண்டுவரப்பட்டு ஏற்றப்பட்டது.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாபெரும் தேசபக்தி போரிலும், இரண்டாம் உலகப் போரிலும் கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன், ரஷ்யர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இது மிகவும் சிறப்பான நாளாக காணப்படுவதோடு, இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்நாயக்க உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.