பிரித்தானிய பாரம்பரியத்தை நினைவூட்டும் முடிசூட்டு விழா…!

108 0

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா, பிரித்தானியர்களின் தலைமுறையினருக்கு ஒரு புதிய இறையாண்மையின் முதல் முடிசூட்டலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.அண்மைய ஆண்டுகளில், அரச திருமணங்கள் மற்றும் ஜூபிலி கொண்டாட்டங்களின் ஆடம்பரத்தை பார்த்த மக்கள்,   ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழைமை மாறாமல் பேணப்படும்  முடிசூட்டு விழாவை இன்று 6 ஆம் திகதி பிரித்தானிய நேரப்படி 11 மணிக்கு பார்வையிடவுள்ளனர்.

லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் அபேயில் கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பியால் மன்னர் சார்ள்ஸுக்கு முடிசூட்டு விழா  இன்று மிக கோலாகலமாக நடத்தி வைக்கப்படவுள்ளது. இந்த தேவாலயத்தில் 1066 ஆம் ஆண்டு முதல் முடிசூட்டு விழா நடைபெற்று வருகிறது.  தேவாலயமும் அரசும் ஒன்றிணைந்து மன்னருக்கு அரச அதிகாரங்களை முறைப்படி வழங்கும்  நாளாகவும் இது அமைகிறது. இதனை கண்டுகளிக்க பிரித்தானிய மக்கள்  தயாராகி வருகின்றனர்.

முடிசூட்டு விழாவிற்கு முன்னதாக ஒரு அரிய நேர்காணலில், சார்ள்ஸின் சகோதரி இளவரசி anne, கூறுகையில், நவீன பிரிட்டனில் அரச நிறுவனங்களின்  ஒன்றினைந்த சேவையில் , “அரசியலமைப்பின், நீண்ட கால ஸ்திரத்தன்மையின் பரிமாணத்தை முடியாட்சி வழங்குகிறது. அது உண்மையில் வேறு எந்த வகையிலும் வருவது மிகவும் கடினம். எனது சகோதரரின் ஆட்சியில் இருந்து பொதுமக்கள் எந்த ஆச்சரியம் மிக்க மாற்றத்தையும்  எதிர்பார்க்க தேவையில்லை. அவர் தனது  சேவையில் உறுதியாக இருக்கிறார். அது உண்மையாகவே இருக்கும் என்று கூறியுள்ளார்.

இன்றைய தினம்  பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து மன்னர் சார்ள்ஸ் மற்றும் மகா ராணி கமிலா , டயமண்ட் ஜூபிலி ஊர்தியில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு பயணம் செய்யும் போது விழா ஆரம்பமாகின்றது . பாரம்பரியத்திலிருந்து சற்று விலகி, ஆறு சாம்பர் நிறக் குதிரைகளால் டயமண்ட் ஜூபிலி ஸ்டேட் ஊர்தி பயணிக்கும் அவர்களுடன் மிகவும் சகல துறைகளையும் சேர்ந்த ஆயுத படையினர் மற்றும் நம்பகமான றோயல்  மெய்க்காப்பாளர்கள் ஆகியோர்  சுமார் 1.3 மைல் தூரம் பயணிப்பர். தொடர்ந்து, மன்னர்  சார்ள்ஸ் மற்றும் மகா ராணி கமிலா கோல்ட் ஸ்டேட் ஊர்தியில்  மீண்டும் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், இந்த ஊர்தியானது 1831 இல் மன்னர் நான்காவது ஜோர்ஜ் பயன்படுத்தியதாகும். ஏழு மீற்றர் (23 அடி) நீளமும், 3.6 மீற்றர் (11 அடி 8 அங்குலம்) உயரமும், நான்கு மெட்ரிக் தொன் எடையும் கொண்ட 260 ஆண்டுகள் பழமையான இந்த பெரிய வண்டியை, நடை வேகத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஊர்வலத்தை  தொடர்ந்து மன்னர் அரச தலைவராக இருக்கும் ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் வருவார்கள். ஒவ்வொரு நாட்டின் கொடி ஏந்தியவர்களும் கவர்னர் ஜெனரல் மற்றும் பிரதம மந்திரிகளும்  வருவார்கள். மன்னர்  சார்ள்ஸ் மற்றும் மகாராணி அனைத்து  ஆராதனைகளிலும் பங்குகொள்வர்.  அதேவேளை,   சார்ள்ஸின் பேரன் இளவரசர் ஜோர்ஜ்  மற்றும் கமிலாவின் மூன்று பேரன்கள் மற்றும் அவரது மருமகன் ஆர்தர் எலியட் ஆகியோரும் ஊர்வலங்களில் பங்கேற்பார்கள்.

இந்த ஆராதனை சேவை பாரம்பரியத்தின் மீது சார்ந்திருக்கும். ஆனால் முதன்மையானதாக இருக்கும். பண்டைய கிறிஸ்தவ சடங்குகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  மன்னர்  சத்தமாக ஜெபிப்பது, பிற மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்களின் பங்கேற்பு, பெண் மதகுருமார்களின் ஈடுபாடு மற்றும் பிரிட்டிஷ் தீவுகளில் பேசப்படும் பிற மொழிகளின் ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும். கூடுதலாக, சுற்று சூழ்ந்த  பாரம்பரிய மரியாதை “மக்களின் மரியாதை” என்று மாற்றப்பட்டுள்ளது என அரண்மனை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கேன்டர்பரி பேராயர், இந்த ஆராதனை சேவை தொடர்பில் கூறுகையில், இந்த முடிசூட்டு விழா  “பாரம்பரியத்தை கொண்டாடும்” அதேநேரத்தில் “நமது சமகால சமுதாயத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் புதிய கூறுகளை” கொண்டிருக்கும் என்றார்.

முடிசூட்டு விழாவிற்கு பயன்படுத்தப்படும் பாரம்பரிய சின்னங்கள் 

முடிசூட்டு விழாவின் மூன்றாவது அம்சம், மன்னர் முடிசூடப்படும் கதிரையில்  அமர்ந்து, பேராயரால் புனித எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுவதாகும். இது சேவையின் மிகவும் புனிதமான பகுதியாகவும்,  அரசனுக்கும் ஆண்டவனுக்கும் இடைப்பட்ட  தருணமாகவும்  கருதப்படும் என கூறப்படுகிறது .

இச்செயலின் புனிதத்தைப் பாதுகாக்க மூன்று பக்க சிறப்புத் திரை காணப்படுவதால் இந்தப் பகுதி தெரிவதில்லை. பேராயர் மன்னர் சார்ள்ஸின் தலை, மார்பகம் மற்றும் கைகளில் அபிஷேகம் செய்வதற்கு முன், கழுகு வடிவில் உள்ள தங்கக் குடுவையான அம்புல்லாவிலிருந்து “கிறிஸ்ம் எண்ணெயை”  வெள்ளியிலான முடிசூட்டு கரண்டியில் எடுத்து  ஊற்றுவார். 12 ஆம் நூற்றாண்டின்  புனித கரண்டியான இது  முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்படும் மிகப் பழமையான பொருளாகும்.

வாள் வழங்கல் 

மன்னருக்கு  பொன்னாடை அணிவிக்கப்பட்டு முடிசூட்டு அலங்காரம் முடிந்ததும் மன்னருக்கு வாள்  வழங்கப்படும். இந்த வாளில்  விலைமதிப்பற்ற பொருட்கள்  அடக்கும். உருக்கினாலான இந்த வாள் 1820 இல் தயாரிக்கப்பட்டதுடன்,  முதன்முதலில் நான்காவது ஜோர்ஜ்  மன்னரின் முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்பட்ட இரத்தின வாளாகும்.

இது  தங்கம் , மரகதம், மாணிக்கங்கள், நீலக்கற்கள்  மற்றும் வைரங்களால்  ஆனது. பேராயரால் ஆசீர்வதிக்கப்பட்டதன் பின்னர் மன்னரிடம் இந்த வாள் ஒப்படைக்கப்படும்.

Sovereign’s Orb

Sovereign’s Orb, 1661 முதல்   ஒவ்வொரு முடிசூட்டு விழாவிலும் பயன்படுத்தப்படுகிறது,  உருண்டை வடிவம் இறையாண்மையின் அரச அதிகாரத்தையும் கிறிஸ்தவ உலகத்தையும் குறிக்கிறது. இது இரண்டு வெற்று தங்க அரைக்கோளங்களைக் கொண்டது. இது 365 வைரங்கள், 18 மாணிக்கங்கள், ஒன்பது மரகதங்கள் மற்றும் மிக விலையுயர்ந்த ஒன்பது நீல கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.

சிலுவையுடன் கூடிய இறையாண்மையின் செங்கோல்


சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் இரண்டு இறையாண்மையின் செங்கோல் இடம்பெறும். சிலுவையுடன் கூடிய இறையாண்மையின் செங்கோல் தற்காலிக அதிகாரத்தைக் குறிக்கிறது மற்றும் நல்ல நிர்வாகத்துடன் தொடர்புடையது. பல ஆண்டுகளாக, இது சில மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது.

குறிப்பாக 530 கரட் எடையுள்ள கல்லினன் வைரம் பொருத்தப்பட்டுள்ளது. இது 1911 முதல் தங்கக் கம்பியின் உச்சியை அலங்கரித்துள்ளது. இது “ஆப்பிரிக்காவின் பெரிய நட்சத்திரம்” என்றும் அழைக்கப்படுகிறது. 1905 இல் தென்னாப்பிரிக்காவில் வெட்டப்பட்ட 3,106 கரட்  வைரத்திலிருந்து வெட்டப்பட்டு காலனித்துவ அதிகாரிகளால் பிரிட்டிஷ் அரச குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை இன்று பல தென்னாப்பிரிக்கர்கள் பிரிட்டனால் கையகப்படுத்தப்பட்டது சட்டவிரோதமானது எனக் கருதுகின்றனர். அதனை மீள வழங்குமாறு கோரிக்கை  விடுத்துள்ளனர். இதற்கிடையில், “சமத்துவம் மற்றும் கருணையின் கோள்” என்று குறிப்பிடப்படும் புறாவுடன் உள்ள இறையாண்மையின் செங்கோல் ஆன்மிக அதிகாரத்தை குறிக்கிறது மற்றும் அதன் பறவை பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நவீனமயமாக்குவதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், வரலாற்று முடிசூட்டு விழாவின் முக்கிய கூறுகள் இதில் மாறாது  அடங்கும். குறிப்பாக  அங்கீகாரம், சத்தியம், அபிஷேகம், மற்றும் கிரீடம், சிம்மாசனம் மற்றும் மரியாதை ஆகிய  அனைத்தும் பாரம்பரியமாகவே அமையும். இந்த முக்கிய தருணங்களில் சிலவற்றின் போது முடிசூட்டு விழா வரலாறு முழுவதும் மன்னர்கள் மற்றும் மகா ராணிகளால் சேகரிக்கப்பட்ட முடியாட்சியின் சக்திவாய்ந்த சின்னங்கள் என்பன மன்னர் சார்ள் ஸுக்கு வழங்கப்படும்.

முதல் முக்கிய அம்சமாக அமைவது மன்னர் சார்ள்ஸ் வெஸ்மின்ஸ்டர் அபே இல் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மேடையில் நின்று நாட்டு மக்களுக்கு  காட்சியளிப்பார். பின்னர் மன்னர் முடிசூட்டு விழாவின் போது பயன்படுத்தப்படும் பைபிளைப் பெற்று, பேராயர் முன்பாக முடிசூட்டு உறுதிமொழியை எடுப்பார். அத்தருணம் சட்டப்படி ஆட்சி செய்வதாகவும் கருணையுடன் நீதியை நிறைவேற்றுவதாகும் உறுதி  செய்வார்.

ஆராதனை விழாவில்  பலரது கவனமும் மகாராணி கமிலாவை நோக்கி திரும்புகிறது. அவர் அபிஷேகம் செய்யப்பட்டு, முடிசூட்டப்பட்டு, எளிமையான விழாவில் சிம்மாசனத்தில் அமர்த்தப்படுவார். அவர் மகாராணி மேரியின் கிரீடத்தைப் பயன்படுத்துவார். இது மறைந்த இரண்டாம் எலிசபெத் மகா ராணியின் தனிப்பட்ட சேகரிப்பில் இருந்து பல நகைகளுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஆராதனை சேவையின் ஆன்மீகக் கூறுகள் முடிந்ததும், மன்னரும் மகாராணியும் புனித எட்வர்ட் தேவாலயத்திற்குச் செல்வார்கள். இது அபேயின் மையத்தில் உள்ள  கல்லாலான ஒரு தேவாலயமாகும். அங்கு சார்ள்ஸ் புனித எட்வர்டின் கிரீடத்தை’ இம்பீரியல் ஸ்டேட் கிரீடத்திற்கு மாற்றுவார். முடிசூட்டு கிரீடம் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மீள வழங்கப்படும். உள்நாட்டுப் போருக்கு முன்பு முடிசூட்டு கிரீடம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில்  இருந்தது. எனவே இரண்டாவது கிரீடம் இறையாண்மைக்கு வேறு இடங்களில் அணிய உருவாக்கப்பட்டது.

 

ஆர். பி. என்