கொத்தியாலடி இந்து மயான அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம்;(காணொளி)

284 0

யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் கீழுள்ள கொத்தியாலடி இந்து மயான அபிவிருத்தி சங்க பொதுக்கூட்டம் வலிகாமம் தெற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

வலிகாமம் பிரதேசசபை செயலாளர் வி.சுதர்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கடந்த கால வேலைத்திட்டங்கள் நன்கொடைகள் தொடர்பான விடயங்கள் கலந்தரையாடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபை அங்கத்தவர்கள் தெரிவும் இடம்பெற்றது.

இதன் போது இ.திருவிளங்கம் தலைவராகவும், பொ.தேவராசா செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டார். பொருளாளராக க.கருணாநாயகம் தெரிவு செய்யப்பட்டு, 10 அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.