ஜனாதிபதியால் இனப்பிர்ச்சினையை தீர்க்கமுடியாது : விந்தன் கனகரத்தினம்

112 0

தையிட்டி போன்ற அராஜகங்களை புரிந்து கொண்டு ஜனாதிபதியால் இனபிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(04.05.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்

இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருக்கக்கூடிய தையிட்டி பகுதியிலே ஒரு பிரமாண்டமான புத்தவிகாரை இராணுவத்தினுடைய உதவியுடன் கட்டப்பட்டிருக்கின்றது.

அந்த இடமானது ஒரு தனியாருக்கு சொந்தமான நிலம் நீதிமன்ற கட்டளையை மீறி இப்படியான சம்பவங்கள் அரசாங்கத்தினால் திட்டமிட்டு வடக்கு கிழக்கிலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தொடர்ச்சியாக வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை, கன்னியா வெந்நீர் ஊற்று, பிள்ளையார் ஆலய பகுதி அதனைவிட கிழக்கு மாகாணத்திலே மாதவனை பகுதி மேய்ச்சல் தரையில் இப்படியாக பல்வேறு அத்துமீறல்களை இந்த அரசாங்கம் மற்றும் அரச திணைக்களங்கள் முன்னெடுத்து வருகின்றது.

அரசு இதனை தொடர்ந்து வண்ணமே உள்ளது. இந்த நிலையில் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கக்கூடிய ரணில் விக்ரமசிங்க அண்மையிலே வவுனியாவில் தமிழ் கட்சிகளுடன் பேசி இனப்பிரச்சினைகளை தீர்ப்போம் என்ற ஒரு இணக்கப்பாட்டினை எட்டியிருந்தார்.

அதனைவிட இந்த ஆண்டு முற்பகுதியிலே நாடாளுமன்ற சர்வகட்சி கூட்டத்தினையும் கூட்டி பல விடயங்கள் எட்டப்பட்டிருந்தாலும் அவற்றில் எவையுமே முறைப்படுத்த முடியாதநிலையில் மீண்டும் இப்பொழுது மேதினத்தன்று ஒரு அறைகூவலை விடுத்திருக்கிறார்.

தமிழ் கட்சிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் நாடாளுமன்றத்திலே அரசாங்கத்தில் அங்கம் வகித்து பிரச்சினைகளை தீர்ப்போம் என்று கூறியிருக்கின்றார்.

இந்த சூழ்நிலையிலே நாங்கள் ஜனாதிபதியினை நோக்கி தமிழ் மக்கள் சார்பிலே சொல்லக்கூடியது என்னவெனில் நீங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருக்கின்றீர்கள்.

தற்போது நடைப்பெற்றுகொண்டிருக்கின்ற பௌத்தமயமாக்கல் சிங்கள குடியேற்றங்கள் என்பவற்றை உடனடியாக உங்களால் தடுத்து நிறுத்த முடியும்.

எனவே இந்த அதிகாரிகளும் இராணுவமும் கடற்படையும் புலனாயவாளர்களும் பொலிசாரும் கட்டுமீறி சட்டத்தை மீறி நீதிமன்ற கட்டளைகளை மீறி மதிக்காமல் பல்வேறு அடாவடித்தனங்களை செய்துவருகின்ற நிலையில் நீங்கள் எந்தவொரு நல்லிணக்கத்தையும் தமிழ்மக்கள் மீது காட்டாது ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வந்த பின்பு எங்கள் மீது இருக்ககடிய கோரிக்கை நியாயமானது.

நீண்டகாலமாக இருக்கூடிய தமிழ் அரசியல் கைதிகளை நீங்கள் நினைத்தால் பொதுமன்னிப்பு அளித்து நாளையே விடுதலை செய்யலாம் அதனைவிட காணாமல் போனோருடைய பிரச்சினைக்கு என்ன தீர்வு என்னநடந்தது என்ற தீர்வை உங்களால் சொல்லமுடியும் நடைபெறுகின்ற அட்டூழியங்களை ஒரு முறைமையின் அடிப்படையில் பாதுகாப்பு நீதியமைச்சர் என்ற ரீதியில் வெளிப்படுத்தமுடியும்.

70வருடமாக இந்த நாட்டின் இனப்பிரச்சினை அதாவது ஏற்கனவே குறிப்பிட்டிருந்தீர்கள் சுதந்திர தினத்திற்கு முன்னர் பிரச்சினையை தீர்பபோம் என்று பின்னர் சர்வகட்சி வவுனியாவில் அழைத்து கலந்துரையாடினீர் பின்னர் பாராளுமன்றிலே அரசியலே அங்கம் வகியுங்கள் என கேட்கிறீர்கள் இது உலக நாடகம் இன்று இடம்பெற்றுகொண்டிருக்ககூடிய அராஜக செயல்களை பார்க்கின்ற பொழுது ஒருபக்கம் எங்களை அழித்து கொண்டு மறுபக்கம் நல்லிணக்கம் சமிக்ஞை காட்டுவது போல் நாடகம் ஆடுகின்றனர்.

எனவே இந்த தமிழ் கட்சிகள் எல்லையாக இருந்தாலும் அல்லது நாடாளுமன்றிலே தமிழ் பேசும் எந்த கட்சிகளாக இருந்தாலும் கைதிகளை விடுதலை செய்து தையிட்டி போன்ற அபகரிப்புக்களை உடனடியாக நிறுத்தவேண்டும்.காணாமல் போனோர் பிரச்சினை தீர்வுவேண்டும்.

ஐ.நா தீர்மானத்தினை காட்டி நல்லெண்ணத்திற்கு அழைக்கவேண்டும். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் நாட்டினுடைய காட்டாட்சி இதன் மூலம் ஒலிக்கப்படும் பயங்கரவாத எழுத்து சட்டமும் உற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலேயே தொடர்ந்து கொண்டிருக்கக் கூடிய அம்பாறை மாவட்ட மக்களது அடிப்படை பிரச்சனைகள் அதேபோல திருமணங்களை மட்டக்களப்பு மாவட்ட மக்களினுடைய பிரச்சினைகளும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

குறிப்பாக இந்த பிரதேச செயலகத் தலைமை தேர்தல் பிரச்சனை பிரதானமானதாக காணப்படுகின்றது அம்பாறை மாவட்டத்திலும் தொடர்கின்ற அடக்கம் முறை முதலில் ஒழிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.