கமீலா ; பிரிட்டனின் புதிய மகாராணி யார்?

143 0

தனது கணவர் மன்னரானதை தொடர்ந்து கமீலா பிரிட்டனின் புதிய மகாராணியாகியுள்ளார். மன்னர் சார்ல்ஸ் உடன் இணைந்து ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்றுள்ளார்

மறைந்த பிரிட்டிஸ் மகாராணி குயின் எலிசபெத்தின் மரணத்தின் போது சார்ல்ஸ் பொதுமக்கள் மத்தியில் தனது அஞ்சலியை செலுத்தியவேளை துயரத்தை வெளிப்படுத்தியவேளை கமீலா அவருடன் காணப்பட்டார்.

சார்ல்சின் வாழ்க்கையின் காதலி அவர்- அதேபோல பல தசாப்தங்களாக சார்ல்சின் ஆலோசகராக நம்பிக்கைக்குரியவராக விளங்கிய அவர் மே ஆறாம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் முடிசூட்டிக்கொள்ளும் மன்னரின் மனைவியாக மாறுவார்( 29)

2005 இல் கமீலா சார்ல்சை மணம்முடித்தார்.கமீலா அரசகுடும்பத்தின் முக்கிய உறுப்பினர் என்ற அடிப்படையில் கடுமையாக உழைத்துள்ளார்.தனது கணவருக்கு ஆதரவாக விளங்கியுள்ளதுடன் பெண்கள் சிறுவர்களிற்கான நன்கொடை அமைப்புகளிற்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளார்.

எனினும் சார்ல்ஸ் கமீலாவிற்கு இடையிலான நீண்டகால திருமணத்திற்கு புறம்பான உறவையும் அதன் காரணமாக டயனா அனுபவித்த வேதனையையும் பிரிட்டனில் சிலர் மன்னிக்க தயாராகயில்லை.

நெட்பிளிக்சின் டேர்புலன்ட் என்ற தொடர் சார்ல்ஸ் டயனா கமீலா உறவின் மிகவும் பதற்றமான காலங்களை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.

கமீலா யார் அவரின் எதிர்காலம் என்னவென்பது குறித்து நேயர்களிற்கு புதிய தகவல்களை தெரிவித்துள்ளது.

 

 

 

பிரிட்டனின் புதிய மகாராணியிடமிருந்து எதனை எதிர்பார்க்கலாம்?

1947 இல் பிறந்தவர் கமீலா சாண்ட்.பிரிட்டனின் கிராமப்புறங்களில் வளர்த்த கமீலா இயல்பாகவே குதிரைகள் குறித்து ஆர்வம் கொண்டவர்.

1970ம் ஆண்டுவின்சரில் இடம்பெற்ற போலோ போட்டியில் கமீலா சார்ல்சை சந்தித்தார்.அதன் பின்னர் இருவரும் நண்பர்களாகினர்.

அடுத்தவருடம் இளவரசர் சார்ல்ஸ் ரோயல் நேவியில் இணைந்துகொண்டார்.அக்காலப்பகுதியில் கமீலா குதிரைப்படையை சேர்ந்த ஒருவரை மணம்முடித்தார் இவர்களிற்குஇரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

1981ம் ஆண்டு சார்ல்ஸ்டயனா திருமணம் இடம்பெற்றது -உலகின் மில்லியன் கணக்கானவர்கள் பார்த்த இரசித்த தேவதை கல்யாணம் இது.

எனினும் 1994 இல் சார்ல்ஸ் கமீலாவுடன் தனக்கு திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு உள்ளதை ஏற்றுக்கொண்டார்.

அடுத்த வருடம் பிபிசிக்கு வழங்கிய அதிர்ச்சிகரமான பேட்டியில் டயனா இதனை உறுதி செய்தார்.

எங்கள் திருமணத்தில் மூவர் இருந்தோம் அதனால் அது சற்று நெரிசலாக இருந்தது என டயனா தெரிவித்தார்.

கமீலாவும் பார்க்கர் பௌல்சும் 1995 இல் விவகாரத்து செய்தனர். அடுத்தவருடம் டயனாவும் சார்ல்சும் விவாகரத்து செய்தனர்.

ஊடகங்கள் இளவரசி  டயனா மீது கவனம் செலுத்த தொடங்கியதால் – கமீலா பொதுவாழ்க்கையில்மறக்கப்பட்டவர் ஆனார்.

1997 இல் பாரிசில் இடம்பெற்ற வாகன விபத்தில் டயனா உயிரிழந்ததால் டயான ஆதரவு கமீலா எதிர்ப்பு உணர்வு அதிகரித்தது.

1999 இல் கிளாரன்ஹவுஸ் கமீலாவை  மீண்டும் வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டது- லண்டனின் ரிட்ஸ்ஹோட்டலுக்கு வெளியே சார்ல்ஸ் உடன் கமீலா தோன்றினார்.

சார்ல்ஸ் உடன் இருப்பதற்காக அவர் கிளாரன்ஸ் ஹவுசிற்கு சென்றார்,அதன் பின்னர்அவரது பெயர் உத்தியோகபூர்வ ஆவணங்களில் வெளிவரத்தொடங்கியது.

ஆறு வருடங்களிற்கு பின்னர் தசாப்தகால காதல்கதை வின்ட்சரில் இடம்பெற்ற திருமணத்துடன் முடிவிற்குவந்தது.எலிசபெத் மகாராணியின் ஒப்புதலுடன் இது இடம்பெற்றது.

கமீலா இளவரசர் சார்ல்ஸின் மனைவியாகவும் வருங்கால மகாராணியாகவும் உறுதிப்படுத்தப்பட்டார்.

அதன் பின்னர் அரசகுடும்பத்தின் மூத்தவருக்கான விதத்தில் தன்னை மாற்றிக்கொண்ட அவர் இளவரசர் சார்ல்சிற்கு பிரிட்டனில் இடம்பெறும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் உறுதுணையாக செயற்பட்டு வருகின்றார்,கமீலாவிற்கு விமானபயணங்கள் என்றால் அச்சம் ஆனாலும் அவர் வெளிநாட்டு பயணங்களில் சார்ல்சுடன் கலந்துகொள்கின்றார்.

கமீலாவிடம் பதற்றத்தை குறைக்கும் அகற்றும்திறன் காணப்படுகின்றது இதனால் அவர் அரசகுடும்பத்திற்கும் பிரிட்டிஸ் அரசாங்கத்திற்கும் மிகவும் தேவைப்படும் ஒருவராக மாறினார்.

உங்களிற்கு அருகில் ஒருவர் இருப்பது எப்போதும் சிறந்த விடயம்,அவர் ஒரு பெரும் ஆதரவு வாழ்க்கையின் வேடிக்கையான பக்கங்களை இரசிக்கும் குணம் அவருக்குள்ளதால் நாங்கள் இருவரும் சேர்ந்து சிரிப்போம் கடவுளிற்கு நன்றி என சார்ல்ஸ் 2015 இல் சிஎன்ன்னிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

முடிசூட்டும் நிகழ்விற்கு முன்னர் கருத்து தெரிவித்துள்ள கமீலாவின் மகன் சார்ல்சிற்கும் தனது தாய்க்கும் இடையிலான உறவு குறித்து இவ்வாறு தெரிவிக்கின்றார்.

யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை அவள் நேசித்த நபரை அவள் திருமணம் செய்துகொண்டாள் இதுதான் நடந்தது என டொம் பார்க்கர் பவுஸ் தெரிவித்துள்ளார்.