20 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

433 0

சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கொழும்பு – க்ராண்ட்ஸ்பாஸ் பகுதியில் ஒருவர் கைதாகியுள்ளார்.

வீதியோரமாக கறுப்பு நிற பையுடன் நின்றிருந்த அவர், திருடர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்து குறித்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

உந்துருளியில் பிரவேசித்த ஒருவர் தம்மிடம் குறித்த போதைப் பொருளை வழங்கிச் சென்றதாக ஆரம்ப விசாரணைகளில் சந்தேகத்துக்குரியவர் கூறியுள்ளதாக, பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.