தாயகம் விடியும் வரை தமிழினம் ஓயாது!

224 0

மே நாள் நிகழ்விற்கு  நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.இன்று (30.04.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இந்நிலையில் மிழ் அரசுக்கட்சியின் ஏற்பாட்டில், மே முதலாம் நாள், கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

சமகாலத்தில், தமிழ்த்தேசிய இனம் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள சகலவிதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தும், தாயகம் விடியும் வரை தமிழினம் ஓயாது எனும் அடிப்படையில் குரல்கொடுக்கும் இளைஞர் மற்றும் யுவதிகளின் பெருந்திரட்சியின் ஊடாக, பன்னாட்டு சமூகத்துக்கும், அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.