லுணுகம்வெஹரவில் ஒருவர் சுட்டுக் கொலை!

182 0

லுணுகம்வெஹெர பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

37 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.