சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்துக்கு எதிராகவே வாக்களிப்போம்

158 0

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை முழுமையாக இல்லாதொழிக்கும் வகையிலான சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மற்றும் நிபந்தனைகளுக்கு எதிராகவே சுதந்திர மக்கள் சபை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.ஏற்றுக்கொள்ள கூடிய நிபந்தனைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நாணய நிதியத்திடம் வலியுறுத்துவோம் என்றார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள்.தேசிய கடன்களை மறுசீரமைத்தால் வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும்.தேசிய கடன்களை மறுசீரமைப்பதை தவிர்க்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை அவதானத்துக்குரியது.

தேசிய கடன்கள் மறுசீரமைப்பதால் வங்கி வைப்பாளர்களின் சேமிப்புக்கள்,சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது என்று எவருக்கு உத்தரவாதம் வழங்க முடியும்.நாட்டு மக்களின் சேமிப்பை நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கத்துக்கு உரிமையில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானங்களினால் மின்கட்டணம் மற்றும் நீர்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.மொத்த மின்பாவனையாளர்களின் 90 ஆயிரம் மின்பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.நடுத்தர மக்கள் சொல்லனா துயரங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்த முற்படும் போது மக்கள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் தோற்றம் பெறும்.மக்கள் போராட்டத்தை அடக்குவதற்காகவே ஜனநாயகத்துக்கு எதிரான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தயாரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மக்களின் ஆதரவு அத்தியாவசியமானது என்பதை சர்வதேச நாணய நிதியம் பலமுறை அரசாங்கத்திடம் குறிப்பிட்டுள்ளது.நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தொடர்பில் மக்கள் நிலைப்பாடு, ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை முழுமையாக இல்லாதொழிக்கும் வகையிலான சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மற்றும் நிபந்தனைகளுக்கு எதிராகவே இன்று நாங்கள் வாக்களிப்போம்.ஏற்றுக்கொள்ள கூடிய நிபந்தனைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நாணய நிதியத்திடம் வலியுறுத்துவோம் என்றார்.