சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் வசதி திட்டம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (28) நடைபெறவுள்ள பாராளுமன்ற வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய தேவையொன்றின் காரணமாக கொழும்பை விட்டு வெளியேற நேர்ந்ததே இதற்கான காரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தில் கடன் பெறுவதில் தவறில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர் , சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து அதன் நிபந்தனைகளை எளிமையாக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

