கதிர்காமம் மாணிக்க கங்கையில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அங்கு நீராடச் செல்லும் பக்தர்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்குவதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கதிர்காமம் இலக்கம் 2 பாலத்துக்கு அருகில் இந்த முதலைகள் கடித்து இரண்டு மாதங்களில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தவிர கடந்த நவம்பர் மாதம் செல்லக் கதிர்காமத்தில் பெண் ஒருவர் முதலைக்கு பலியானார்.
தற்போது கதிர்காமம் இலக்கம் 01, 02, 03 ஆகிய பாலங்களுக்கு அருகில் சுமார் 7 அடி நீளம் கொண்ட முதலைகள் நடமாடுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

