சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் கிழக்கு மாகாணத்துக்கான இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. மாறாக பொலிஸ் தலைமையகத்துக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூடியே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தம்மை இடமாற்றம் செய்வது தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோவுக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

