களுத்துறையில் கழுத்து வெட்டப்பட்டு பெண் வைத்தியர் கொலை!

154 0

ஆயுர்வேத வைத்தியரான இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவர்  வீடு ஒன்றின் பின்னால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு பகுதியில்   வசிக்கும் விக்கிரமாரச்சிகே பிரேமாவதி என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை (27) காலை வீடு ஒன்றின் பின்புறம், கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக தகவல் கிடைத்ததனையடுத்து  பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.