யாழ்.தெல்லிப்பழையில் தந்தை செல்வாவின் நினைவு தூபி திரைநீக்கம்

120 0

தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளில் அவரது நினைவுத் தூபி யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

தெல்லிப்பழையில் அமைந்துள்ள  சேமக்காலையில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் குறித்த நினைவுத் தூபி தந்தை செல்வா நினைவு அறங்காவலர் குழு தலைவரும் தென்னிந்திய திருச்சபையின் ஓய்வுநிலை பேராயருமான சு.ஜெபநேசனால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

கலைஞர் தவ.தஜேந்திரனால் நினைவுத் தூபி வடிமைக்கப்பட்டதுடன் இருபாலையிலுள்ள சஹானா சிற்பாலயம் சிற்ப வடிவமைப்பை மேற்கோண்டது.

இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வே.பத்மதயாளன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கிறிஸ்தவ மதகுருமார்கள் , தந்தை செல்வா அறக்கட்டளை அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.