மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்று பைடன் அறிவிப்பு

180 0

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 2024 தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றவேளை ஆரம்பித்த பணிகளை பூர்த்தி செய்வதற்கு மேலும் கால அவகாசத்தை வழங்குமாறு ஜோ பைடன் வாக்காளர்களை கேட்டுக்கொள்ளவுள்ளார்.

அமெரிக்காவின் மிகவும் வயதான ஜனாதிபதிக்கு மேலும் நான்கு வருடங்களை வழங்குவது குறித்த கரிசனையை கைவிடுமாறும்  பைடன் கேட்டுக்கொள்ளவுள்ளார்.

முதலாவது பதவிக்காலத்தில் தான் சாதித்த விடயங்களும் வோசிங்டனில் 50 வருட அரசியல் அனுபவங்களும் தனது வயது குறித்த கரிசனையை போக்குவதற்கு போதிய விடயங்கள் என பைடன் கருதுகின்றார்.

ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவது குறித்து அவர் எந்த சவால்களையும் எதிர்கொள்ளமாட்டார் – அவருக்கு கடும் சவால் விடக்கூடிய எவரும் கட்சியில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

எனினும் கடுமையாக பிளவுபட்டுள்ள தேசத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கா பைடன் கடும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்பும்.

2019 இல் இன்றைய தினமே பைடன் வெள்ளை மாளிகைக்கு போட்டியிடவுள்ளதாகவும் டொனால்ட் டிரம்பின் கொந்தளிப்பான ஆட்சிக்கு மத்தியில் தேசத்தை குணப்படுத்த போவதாகவும் அறிவித்தார்.

ஆனால் இன்றுவரை இது சாத்தியமற்றதாக காணப்படுகின்றது.

அமெரிக்க வரலாற்றின் நவீன கால ஜனாதிபதிகளிற்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஒப்புதலை மக்கள் வழங்கியிருந்த போதிலும் பைடன் விடயத்தில் அது மாறுபட்டதாக காணப்படுகின்றது.

அவரது வயது குறித்த கரிசனை காரணமாக ஜனநாயக கட்சியின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் அவர் போட்டியிடுவதை விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த கரிசனை நியாயமானது என்பதை ஜோ பைடனே ஏற்றுக்கொண்டுள்ளார்.