ஞானம் மற்றும் இரக்கத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்ற அழைப்பை விடுத்த திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா, திபெத்தின் நிலைமையை தனது சொந்த உதாரணத்தைக் மேற்கோள்காட்டி, தற்போதைய சூழ்நிலையை பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க அனைவரையும் வலியுறுத்தினார்.
புது தில்லியில் 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பௌத்த உச்சி மாநாட்டில் உரையாற்றிய போதே திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவும் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த மாநாடு உண்மையில் எமது தைரியத்தையும் அதிகரிக்க உதவும். உதாரணமாக, திபெத்தின் தற்போதைய போராட்டம் மற்றும் சூழ்நிலையை நான் கையாளும் விஷயத்தில், நீங்கள் அதை ஒரு குறுகிய கோணத்தில் மட்டுமே சிந்தித்தால், உங்கள் நம்பிக்கையை இழக்க நேரிடும். பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் நீங்கள் மிகவும் நெகிழ்ச்சியான மனதைப் பெறலாம்.
எனவே, உங்கள் அன்றாட வாழ்க்கையில் கூட, மிகப்பெரிய மற்றும் தாங்க முடியாத பிரச்சனைகள் இருக்கலாம். இருப்பினும், உங்களுக்கு தைரியம் இருந்தால், துன்பங்களை வாய்ப்புகளாக மாற்றிமிகவும் வலிமையான நிலையில் இருப்பீர்கள். உலகின் அனைத்து சிறந்த ஆன்மிக ஆசிரியர்களிலும், புத்தரை ஒரு தனித்துவமான ஆசிரியராக வரையறுக்கும் ஒரு விஷயம், அவர் சார்ந்து தோற்றம் பற்றிய போதனையாகும்.
மேலும் இது பௌத்த நுண்ணறிவு மற்றும் புத்தரின் போதனையின் சாரத்தை உண்மையில் பிரதிப்பளிக்கிறது. பௌத்த போதனையின் இதயம் மற்றும் புத்தரின் பண்பைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. நாம் ஒவ்வொருவரும் அவருடைய போதனைகளை தீவிரமாக எடுத்துக் கொண்டால், அன்றாட வாழ்வில் உண்மையான வேறுபாட்டைக் காண முடியும் என்றார்.

